“இதுக்கு என்ன சொல்றீங்க?” .. மூன்றாவது அம்பயரிடம்.. வேண்டுமென்றே ஒரண்டை இழுத்த வீரர்!’.. ‘ஐபிஎல் நிர்வாகத்தின் முடிவு இதுவா?’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் 2020 தொடரில், மும்பை இந்தியன்ஸ் , டெல்லி கேப்பிடல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ ஆகிய அணிகள் முன்னேறி விட்ட நிலையில், பஞ்சாப் அணி முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது.
எனினும சென்னை அணி ஒரு போட்டியில் வென்றதால், பஞ்சாப் அணியும் சென்னை அணியை போலவே, தொடரில் இருந்து வெளியேறியது. இந்த போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், 49 பந்துகளில் 62 ரன்கள் குவித்ததுடன், கடைசி மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்திருந்தார்.
இந்த ஆட்டத்தில், ருத்துராஜ் அடித்த பந்துக்கு, கள நடுவர் விக்கெட் கொடுத்தார், ஆனால் பந்து தரையில் பட்டு பிடிப்பதைப் போல் இருந்ததன் காரணமாக விக்கெட் இல்லை என்று பின்னர் மூன்றாவது அம்பயரால் அறிவிக்கப்பட்டது
இதனால் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அணில் கும்ப்ளே மற்றும் கேப்டன், கே.எல்.ராகுல் கோபம் அடைந்தனர். காரணம், அந்த அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால் பஞ்சாப் அணி பிளே ஆப்க்கு சென்றிருக்கலாம்.
MEANWHILE : Your Honour... இப்போ
சொல்லுங்க Out தானே...?#CSKvKXIP #Cricanandha @klrahul11 @lionsdenkxip pic.twitter.com/bqU5pHoYuj
— Cricket Anand 🏏 (@cricanandha) November 1, 2020
ஆனால், பின்னர் சில ஓவர்கள் முடிந்து டுப்லஸ்ஸிஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்த கேட்ச் பிடிக்க பட்டவுடன் கே.எல்.ராகுல் வேண்டுமென்றே 3வது அம்பயரை ‘இதுக்காச்சும் அவுட் கொடுப்பீங்களா? இல்ல இதுவும் தரையில் பட்டுதுனு சொல்லி நாட் அவுட் கொடுத்துடுவீங்களா?’ என்று சைகையால் கேட்டார்.
இதனை பார்த்த நடுவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகத்தில், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கே.எல். ராகுலுக்கு, விதிகளின்படி குறைந்தபட்ச தண்டனை கொடுக்கப் படலாம் எனறும் பேசப்பட்டு வருகிறது.