"முதல் 'BALL' சச்சின் 'ஹெல்மெட்'ல பலமா பட்ருச்சு.. ஆனா அடுத்த BALL'ல நடந்ததே வேற.." 'சச்சின் VS அக்ரம்' மோதலை பகிர்ந்த 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் (Venkatesh Prasad), பாகிஸ்தான் வீரர் அக்ரமிற்கு எதிராக, சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) கொடுத்த பதிலடி குறித்து தெரிவித்துள்ள கருத்து, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஒரு காலத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் என்பது, அதிகம் பரபரப்புடன் நடைபெறும் போட்டியாகும். அதிலும் குறிப்பாக, சச்சின் ஆடிக் கொண்டிருந்த தொண்ணூறுகளின் இறுதி காலக்கட்டங்களில், இரு அணி வீரர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியின் விறுவிறுப்பு உச்சத்தில் இருக்கும்.
அத்தகைய சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தான், ஒரு யூ டியூப் சேனலுக்கு அளித்த இன்டர்வியூவில் வெங்கடேஷ் பிரசாத் தற்போது தெரிவித்துள்ளார். 'ஷார்ஜாவில், இந்தியா மாற்றம் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. அந்த போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் (Wasim Akram) தனது முதல் பந்தையே பவுன்சராக வீச, சச்சினின் ஹெல்மெட்டில் பலமாக பட்டது.
அந்த பந்து, சுமார் 145 கி.மீ வேகத்தில் வந்திருக்கும். தொடர்ந்து, லெக் அம்பையர் திசையில் நடந்து சென்ற சச்சின், தலையை மட்டும் சற்று ஆட்டினார். அதைத் தவிர சச்சின் வேறு ஒன்றும் செய்யவில்லை. அவர் தனது ஹெல்மெட்டைக் கூட கழற்றிப் பார்க்கவில்லை.
அதன் பிறகு, அதே ஓவரில், இரண்டாவது பந்தை எதிர்கொள்ள தயாரானார் சச்சின். முதல் பந்தைப் போலவே, அதே வேகத்தில், பவுன்சர் பந்து ஒன்றை வாசிம் அக்ரம் வீச, அதனை சிக்சருக்கு விரட்டி, அசத்தினார் சச்சின். ஆனாலும், அதே அமைதியுடன் தான் சச்சின் இருந்தார்' என என்ன நடந்தாலும், சச்சினின் குணம் அப்படியே தான் இருக்கும் என்பது பற்றி, வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.