'கொரோனா' டெஸ்ட் பண்ற நேரத்துல... 'சச்சின்' பார்த்த வேலை... "சேட்டை புடிச்ச ஆளா இருப்பாரு போல..." வைரலாகும் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலக நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் சாலை பாதுகாப்பு டி 20 தொடர், ராய்ப்பூரில் தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கொரோனா தொற்றின் காரணமாக இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நிறுத்தப்பட்ட போட்டிகளில் இருந்து மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளின் முன்னாள் வீரர்கள் ஆடி வருகின்றனர்.
இதில், இந்திய அணிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கி வரும் நிலையில், மீண்டும் தொடங்கிய தொடரின் முதல் போட்டியில், வங்காளதேச அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, தங்களது அடுத்த போட்டியில், இங்கிலாந்து அணியுடன் தற்போது மோதி வருகிறது.
முன்னதாக, இந்த போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, தான் குறும்புத் தனமாக செய்த செயல் ஒன்றை வீடியோவாக சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மருத்துவ ஊழியர் ஒருவர், சச்சினிடம் இருந்து மாதிரிகளை எடுத்த போது, தான் அதன் மூலம் காயமடைந்தது போல கத்தினார். திடீரென, அந்த ஊழியர் பயந்த நிலையில், உடனடியாக சச்சின் சிரித்துக் கொண்டார்.
அது மட்டுமில்லாமல், அங்கு சுற்றி இருந்தவர்களும் சச்சினின் செயலைக் கண்டு, சத்தம் போட்டு சிரித்தனர். மேலும், அந்த வீடியோவின் கேப்ஷனில், 'நான் 200 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 277 கோவிட் டெஸ்ட்களில் ஆடியுள்ளேன். தற்போதுள்ள மனநிலையை மாற்ற ஒரு சிறிய குறும்பு. நாங்கள் விளையாட வேண்டி, இங்கு வந்து உதவும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி' என சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.