Kadaisi Vivasayi Others

கோலி பார்ம்க்கு வர இதான் ஒரே வழி.. சுனில் கவாஸ்கர் சொன்ன ஐடியா..! ஆனால் அதுக்கு சச்சின் மனசு வைக்கனுமே

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Feb 11, 2022 07:48 PM

அகமதாபாத்: IND vs WI: இறுதி ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் மோசமான பார்ம் தொடர்வதை பலர் விமர்சித்து வருகின்றனர்.

Sunil Gavaskar Talks about Kohli Poor Form and Sachin Tendulkar

கோலி உங்களுக்கு என்னதான் ஆச்சு..? மறுபடியும் இப்படி ஏமாத்திட்டீங்களே.. கடுப்பான ரசிகர்கள்..!

பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை வெளியேற்றினார்.

இதனிடையே போட்டியின் 4வது ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா அவுட்டாக விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். அந்த ஓவரின் 5வது பந்து வீச்சில், ஜோசப் லெக்சைடில் ஒரு பந்தை வீச, கோலி அதை ஃபிளிக் செய்ய முயன்றார், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் எளிதாக அந்த பந்தை கேட்ச் எடுத்தார்.

Sunil Gavaskar Talks about Kohli Poor Form and Sachin Tendulkar

விராட் கோலி கடந்த சில காலமாக நல்ல பார்மில் இல்லை, 2019 முதல் கோலி சதம் அடிக்கவில்லை. இந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தத் தொடரில் 8,18 மற்றும் 0 என்ற ஸ்கோரைப் பதிவு செய்ததால், முன்னாள் கேப்டன் கோலிக்கு மிகவும் மோசமான தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது. இந்தத் தொடருக்கு முன், கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு தொடரில் கோலி அனைத்து போட்டிகளிலும் 50+ ரன்களைக் கடக்கத் தவறினார்.

இந்நிலையில் வர்னணையாளார் ஹர்சா போக்லே சுனில் கவாஸ்கரிடம் கோலியின் பார்மை மீட்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர், "கோலி தற்போது ஒரு காரியம் செய்ய வேண்டும், நேரடியாக சச்சினிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்" என கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை இந்தியா ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ரோஹித் சர்மா அண்ட் கோ. முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

Sunil Gavaskar Talks about Kohli Poor Form and Sachin Tendulkar

"நல்லா தாங்க பேட்டிங் பண்ணிட்டு இருந்தேன்.. ஆனாலும் டீம்'ல இருந்து தூக்கிட்டாங்க.." புதுசாக கெளப்பி விட்ட ரஹானே

Tags : #SUNIL GAVASKAR #VIRAT KOHLI #SACHIN TENDULKAR #IND VS WI #விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sunil Gavaskar Talks about Kohli Poor Form and Sachin Tendulkar | Sports News.