"இது உங்களுக்கு தான் அப்பா".. பவுலர்களை திணறடித்த பேட்ஸ்மேன்.. அப்பாவுக்கு கொடுத்த சிக்னல்.. நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Feb 26, 2023 02:59 PM

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கின் போது தனது அப்பாவுக்கு பேட்ஸ்மேன் கொடுத்த சிக்னல் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Azam Khan epic gesture for father after 97 knock video

                        Images are subject to © copyright to their respective owners.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, பாகிஸ்தானில் வைத்து PSL டி 20 லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல சர்வதேச வீரர்களும் ஆடி வரும் சூழலில், ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பு நிறைந்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் குவெத்தா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து அந்த அணியின் குர்பாஸ் மற்றும் மன்றோ ஓப்பனிங்கில் இறங்கினர். குர்பாஸ் 8 ரன்களில் அவுட்டாக மன்றோ 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார். வான்டெர் 1 ரன்னிலும் கேப்டன் ஷதாப் 12 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால், அதன்பின்னர் தான் தரமான சம்பவமே காத்திருந்தது.

களத்திற்கு வந்த ஆஸம் கான் நிதானமாக துவங்கினாலும் அடுத்தடுத்து அதிரடி கிளப்பினார். இதன் பலனாக அணியின் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. 42 பந்துகளை சந்தித்த ஆஸம் கான் 97 ரன்கள் விளாசினார். இதில் 9 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் அடக்கம். இதன் பலனாக அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 220 ரன்கள் குவித்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து சேசிங் செய்த குவெத்தா கிளேடியேட்டர்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இஸ்லாமாபாத் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக ஆஸம் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Images are subject to © copyright to their respective owners.

தனது அதிரடி பேட்டிங்கின் இடையே ஆஸம் கான் கிரவுண்டில் இருந்த தனது தந்தையும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான மொயின் கானை பார்த்து புன்னகைத்தவாறே, தனது நெஞ்சில் கைவைத்து தட்டி, உங்களுக்கு என்பதுபோல சிக்னல் செய்தார். அப்போது, மொயின் கானும் கைதட்டி பாராட்டினார். இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் மொயின் கான் எதிரணியான குவெத்தா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் என்பதுதான். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #PSL #AZAM KHAN #MOIN KHAN #CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Azam Khan epic gesture for father after 97 knock video | Sports News.