அதெல்லாம் முடியாது... மன்னிப்பு கேட்க 'அடம்பிடித்த' மூத்த வீரர்... அணியில் இருந்து 'அதிரடி' நீக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 26, 2019 06:08 PM

மன்னிப்பு கேட்க முடியாது என அடம்பிடித்த மூத்த வீரர் அசோக் டிண்டாவை, பெங்கால் அணி அந்த அணியில் இருந்து நீக்கியுள்ளது.

Bengal drop Ashok Dinda from squad for ‘abusing’ bowling coach

பெங்கால் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அசோக் டிண்டா 116 முதல்தர போட்டிகளில் ஆடி 420 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாக தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபி போட்டியில் அசோக் டிண்டாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எனினும் சமீபகாலமாக அவர் பெங்கால் அணியின் பயிற்சியாளர், தேர்வுக்குழு தலைவர் ஆகியோருடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக தெரிகிறது. இதனால் தான் சையது முஷ்டாக் அலி தொடரிலும் அசோக் டிண்டாவை சேர்க்கவில்லையாம். இதனால் ரஞ்சி டிராபிக்கான பயிற்சி ஆட்டத்திலும் கலந்து கொள்ளாமல் முரண்டு பிடித்துள்ளார்.

அணியின் சீனியர் வீரர் என்பதால் அப்போது யாரும் அதை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இந்தநிலையில் ஆந்திரா அணிக்கு முன்பான போட்டிக்கு முன் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீரர்கள் அறையில் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், பந்துவீச்சு பயிற்சியாளர்  ராணாடெப் போஸ் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கே வந்த அசோக் டிண்டா இருவரும் தன்னை தாக்கி பேசுவதாக கூறி, போஸைத் தாக்கி கண்டபடி பேசி இருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்த பெங்கால் கிரிக்கெட் சங்கம், டிண்டாவை மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளது. இதற்கு டிண்டா மறுத்ததால் அவரை அணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. அநேகமாக டிண்டா இனி அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Tags : #CRICKET #IPL