23 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை... முடிவுக்கு வந்தது... ஓய்வை அறிவித்த முன்னாள் 'சிஎஸ்கே' வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 27, 2019 10:05 PM

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷதாப் ஜகாதி அறிவித்துள்ளார்.

 

Former CSK  player Shadab Jakati quits all forms of cricket

கோவாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் ஜகாதி இதுவரை 92 முதல்தர போட்டிகள்(275 விக்கெட்டுகள்), 82 லிஸ்ட் ஏ போட்டிகள்(93 விக்கெட்டுகள்), 91 டி-20 போட்டிகளில் (73 விக்கெட்டுகள்) விளையாடி இருக்கிறார். 2010, 2011,2012,2013 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், 2014-ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும், 2016-ம் ஆண்டில் குஜராத் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.

இந்தநிலையில் திடீரென இன்று தன்னுடைய ஓய்வு முடிவை ட்விட்டரில் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், ''அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளேன். கடந்த 1 ஆண்டாக  அளவு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும் என்னுடைய பயணம் முடிந்துள்ளதாக கருதுகிறேன். எனது கனவு நனவாக 23 ஆண்டுகள் எனக்கு உதவிய பிசிசிஐ, கோவா கிரிக்கெட்டுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.