'நார்மல் சிக்ஸ்-க்கு 6 ரன் ஓகே...' ஆனா 'அந்த' சிக்ஸ்-க்கு எக்ஸ்ட்ரா ரன் கொடுக்கணும்...! - கே. எல் ராகுல் வேண்டுகோள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Oct 15, 2020 04:56 PM

100 மீட்டர் தூரத்துக்கு மேல் அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதலாக ரன் வழங்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

KL Rahul wants sixes to be added for runs over 100 meters

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில், பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு 7 போட்டியில் 5-ல் வெற்றி, 2 தோல்வி என பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

வெற்றி பெற்று ரெண்டாவது இடத்திற்கு முன்னேறும் உத்வேகத்தில் விளையாட உள்ளது. மறுமுனையில் பஞ்சாப் 7 லீக் போட்டிகள் 6 போட்டிகளில் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.

இன்றைய லீக் போட்டியில் தோற்றால் பிளேஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட எட்டாக்கனியாகி விடும். எனவே கட்டாய வெற்றி என்னும் நெருக்கடியில் களம் இறங்க உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் பெற்ற ஒரே வெற்றி பெங்களூருக்கு எதிராக மட்டுமே. அதற்கு பதிலடி கொடுக்க பெங்களூரு காத்திருக்கிறது.

இந்நிலையில் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் காணொலி விவாதத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல் 100 மீட்டர் தாண்டி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன் தேவை என்று குறிப்பிட்டார்.

Tags : #KLRAHUL #SIX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. KL Rahul wants sixes to be added for runs over 100 meters | Sports News.