"முதல்ல உங்க ரெண்டு பேரையும்... ஐபிஎல்ல இருந்து BAN பண்ணனும்!!!"... 'கோலி கிட்டயே காரணத்துடன் சொல்லி'... 'ஷாக் குடுத்த இளம்வீரர்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 15, 2020 04:37 PM

ஐபிஎல் தொடரில் விராட் கோலி, டிவிலியர்ஸ் இருவரையும் தடை செய்ய வேண்டும் என வினோதமான கோரிக்கை ஒன்றை கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

IPL KL Rahul Wants Virat Kohli AB de Villiers To Be Banned Heres Why

நடப்பு ஐபிஎல் தொடர் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இறங்கியுள்ள 3 அணிகளில் ஆர்சிபியும், டெல்லி கேப்பிடள்ஸும் சிறப்பாக விளையாடி வருகின்றன. அதேநேரம் கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்து ஒரேயொரு வெற்றிப்புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

IPL Rahul Wants Virat Kohli AB de Villiers To Be Banned From Heres Why

இந்த சீசனில் இதுவரை ஒரேயொரு வெற்றியை பெற்றுள்ள பஞ்சாப் அணி அந்த வெற்றியை ஆர்சிபி ஆணிக்கு எதிராக 97 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள நிலையில், அந்த இரு அணிகளும் இன்று மீண்டும் மோதவுள்ளன. இதற்கிடையே இரு அணிக் கேப்டன்களாகிய விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் ஐபிஎல் போட்டிகள் குறித்து உரையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த உரையாடலில் ராகுல் முதல்முறையாக கேப்டனாக செயல்படுவது உள்ளிட்ட விராட் கோலியின் பல கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்துள்ளார்.

IPL Rahul Wants Virat Kohli AB de Villiers To Be Banned From Heres Why

அப்போது, டி20 கிரிக்கெட்டில் எந்த விதி மாற்றப்பட்ட வேண்டுமென நினைக்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த ராகுல், "உங்களையும் (விராட் கோலி), டிவில்லியர்ஸையும் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாட தடை விதிக்க வேண்டுமென நான் கோரிக்கை வைப்பேன். நீங்கள் ஐபிஎல்லில் 5000 ரன்கள் உட்பட நிறைய சாதித்துவிட்டீர்கள். இனிவரும் இளம்வீரர்கள் அதே மாதிரியான சாதனைகளை செய்ய வழிவிடுங்கள்" என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL KL Rahul Wants Virat Kohli AB de Villiers To Be Banned Heres Why | Sports News.