வானம் எல்லோருக்கும் சொந்தம்.. விண்ணில் பாய இருக்கும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Nov 09, 2022 12:25 PM

இந்திய வரலாற்றில் முதல்முறையாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் ஒன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

India first private rocket Vikram S to be launched in next week

Also Read | சும்மா சுர்ருன்னு.. உலகத்தின் காரமான மிளகாய்.. அசால்ட் காட்டிய நபர்.. மிரண்டு போன கின்னஸ் அதிகாரிகள்..!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம். வணிக ரீதியில் செயற்கை கோள்களை விண்ணில் ஏவும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம். இந்நிலையில், இந்த நிறுவனம் தயாரித்துள்ள விக்ரம் -S எனும் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறது.

India first private rocket Vikram S to be launched in next week

இந்த ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என அறிவித்துள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் முதல் திட்டம் 'பிரரம்ப்' (ஆரம்பம்) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விக்ரம் -S ராக்கெட் நவம்பர் 12 ஆம் தேதியில் இருந்து 16 ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் பவன் குமார் சந்தனா, “நாங்கள் தயாரித்துள்ள ராக்கெட் வரும் 12 முதல் 16 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். காலநிலையை பொறுத்து ஏவப்படும் தேதி உறுதி செய்யப்படும். ஸ்கைரூட் நிறுவனம், வர்த்தகரீதியாக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது அதற்கான முதல் படி இது" என்றார். இதன்மூலம், இந்தியாவில் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெற இருக்கிறது.

சிங்கிள் ஸ்டேஜ் ராக்கெட்டான இதில் 3 வாடிக்கையாளர் பெலோட் (customer payloads) இடம்பெற இருக்கிறது. இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்கைரூட்டின் இந்த ராக்கெட்டிற்கு 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆய்வு மற்றும் ராக்கெட் ஏவுதலை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனது முதல் ராக்கெட்டை விண்வெளிக்கு இஸ்ரோவின் துணையுடன் ஏவ காத்திருக்கிறது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.

Also Read | "இப்படி ஒரு அனுபவம் கிடைச்சதே இல்லங்க".. மீன்பிடி படகை பார்த்ததும் ஜாலியான சச்சின் டெண்டுல்கர்.. வைரலாகும் வீடியோ..

Tags : #INDIA FIRST PRIVATE ROCKET #FIRST PRIVATE ROCKET VIKRAM S

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. India first private rocket Vikram S to be launched in next week | India News.