“அந்த பொண்ணு புரியாம பேசி பயமுறுத்துது.. வர்ற கருத்தரங்கில் நான் பேசுறேன் பாருங்க!”.. கிரேட்டாவுக்கு எதிராக களமிறங்கும் நவோமி!
முகப்பு > செய்திகள் > உலகம்சுற்றுச் சூழல் போராளி கிரேட்டா தன்பெர்க்கிற்கு எதிராக ஜெர்மனியைச் சேர்ந்த 19 வயதான நவோமி (naomi seibt) சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
புவி வெப்பமயமாதலால் உண்டாகும் பாதிப்புகள் மற்றும் பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக உலகெங்கும் சென்று தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் ஸ்வீடனைச் சேர்ந்த 17வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். ஐ.நா சபையில் உலக நாடுகளின் சுற்றுச் சூழல் பிரதிநிதியாக கோபப்பட்டு பேசியபோது கவன ஈர்ப்பைப் பெற்றவர்.
இந்த நிலையில் கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாறுபாடு குறித்த அறிவியல் குறித்த உண்மைகளை ஆராயாமல் புரிதலே இல்லாமல் பேசிவருவதாகவும், மனிதர்களால்தான் புவி வெப்பமடைகிறது என்பன போன்ற முரணான கருத்துக்களை நம்மிடையே கூறி கிரேட்டா அச்சத்தை விளைவித்து வருவதாகவும் கூறிய நவோமி, இதுகுறித்த முழுமையான தனது கருத்துக்களை வரும் வாரம் நடக்கக் கூடிய சிபிஏசி மாநாட்டில் பங்கேற்று தன் கருத்துக்களை முன்வைக்க விருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.