தம்பி 'செஞ்சுரி' அடிக்க ... அண்ணன் 'லவ்' மூட்ல இயங்க ... 'ஆக்டிவ்' மோடில் இருக்கும் 'பாண்டியா பிரதர்ஸ்' !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 04, 2020 04:32 PM

தனது மனைவியின் பிறந்தநாளையொட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் குருனால் பாண்டியா ட்விட்டரில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Krunal Pandya wishes his wife on her Birthday !

ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடியதன் மூலம் பிரபலமானவர் குருனால் பாண்டியா. அதன் பிறகு இந்திய அணியில் களமிறங்கி சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். 2018 - ல் பங்குரி ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குருனால் பாண்டியா. இன்று தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு, ட்விட்டரில் 'நான் எனது வாழ்நாளில் பார்த்து ரசித்த, சிறந்த உயிரான என் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் குடும்பத்தின் தூணாக விளங்கும் உன்னை அதிகளவு நேசிக்கிறேன்' என்ற பதிவுடன் இரண்டு புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டிருந்தார். இதை அவரது ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

குருனால் பாண்டியாவின் தம்பியான ஹர்திக் பாண்டியா ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு களம் கண்ட டி 20 தொடர் ஒன்றில் 37 பந்துகளில் சதமடித்து பட்டையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #HARDIK PANDYA #KRUNAL PANDYA #MUMBAI INDIANS #IPL 2020