சிறப்பான, தரமான கம்பேக்.. விக்கெட் எடுத்ததும் ‘புஷ்பா’ ஸ்டைலில் கெத்து காட்டிய ஜட்டு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை வீரரின் விக்கெட்டை வீழ்த்தியதை புஷ்பா பட ஸ்டைலில் கொண்டாடிய ஜடேஜாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ரஷ்யா திடீர் அழைப்பு..!
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென் இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 199 ரன்களை எடுத்து. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் (89 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (57 ரன்கள்) ஆகியோர் அரைசதம் விளாசினர்.
இந்தப் போட்டியில் பல மாதங்களுக்கு பிறகு ஜடேஜா இந்திய அணிக்கு திரும்பினார். காயத்திலிருந்து குணமடைந்த அவர் எப்படி பந்துவீசுவார், எப்படி ரன் குவிப்பார் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள், பெரிதும் ஜடேஜாவை எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் தனது வழக்கமான மாயஜால பந்துவீச்சை ஜடேஜா வெளிப்படுத்தினார். அதனை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்களும் திணறினர். குறிப்பாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சந்திமாலின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். வீழ்த்தியவுடன் புஷ்பா திரைப்பட படத்தில் அல்லு அர்ஜூன் தாடியை ஸ்டைலாக தடவது போல் ஜடேஜா செய்தார். ஜடேஜாவின் இந்த ஸ்டைலை கண்டு ரோகித் சர்மா ஆச்சரியத்துடன் கட்டிப்பிடித்து பாராட்டினார்.
ஜடேஜா, இந்த இன்னிங்சில் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை விட்டு கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜா அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் என்று போட்டிக்கு முன் ரோகித் சர்மா கூறியிருந்தார். ஜடேஜா திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது வருகை அணியின் பலத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்விஸ்ட்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே.. சிஎஸ்கே தனி.. மும்பை தனி.. வெளியானது ஐபிஎல் அட்டவணை..!

மற்ற செய்திகள்
