இதுக்கு பேரு தான் ரியல் 'THUG LIFE'.. விக்கெட் எடுத்ததும் பவுலர் செய்த 'சேட்டை'.. வேற மாரி பதிலடி கொடுத்த பேட்ஸ்மேன்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில், ஒரு பந்து வீச்சாளர் விக்கெட் எடுத்தாலோ அல்லது பேட்ஸ்மேன் ஒருவர், அரைசதம் அல்லது சதம் அடித்தாலோ, அதனை சிலர் வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள்.

உதாரணத்திற்கு, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், விக்கெட் எடுத்து விட்டால், மைதானத்தைச் சுற்றி வேகமாக ஓடிக் கொண்டே இருப்பார். இதனால், அவருக்கு 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' என்ற பெயரும் உண்டு.
விக்கெட் கொண்டாட்டம்
அதே போல, தென்னாப்பிரிக்க அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தப்ராஸ் ஷம்ஸி, விக்கெட் எடுத்ததும் கொண்டாடும் விதமும், சற்று வித்தியாசமாக இருக்கும். அவர் விக்கெட் எடுத்து விட்டால், உடனடியாக தனது ஷூவைக் கழற்றி, மொபைல் போன் போல நம்பர் அழுத்தி, யாருக்கோ அழைத்து பேசுவது போன்று, தனது விக்கெட்டினை கொண்டாடுவார். ஷம்ஸியின் இந்த முறை, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
தப்ராஸ் ஷம்ஸி
இதனிடையே, தப்ராஸ் ஷம்ஸியை போலவே வீரர் ஒருவர், விக்கெட் எடுத்ததும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 'ECL T10 league' என்னும் ஐரோப்பியன் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில், Tunbridge Wells மற்றும் Dreux ஆகிய இரு அணிகள் மோதியுள்ளது. அப்போது, மார்கஸ் என்ற வீரர் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில், ஸ்டம்பை விட்டு விலகி ஆட முயன்றுள்ளார்.
அசத்தல் பதிலடி
அப்பாஸ் என்ற பந்து வீச்சாளர் வீசிய பந்து, பேட்டில் சரிவர படாமல், ஸ்டம்பில் பட்டு, விக்கெட்டாக மாறியது. இதனை, தப்ராஸ் ஷம்ஸி போலவே ஷூவைக் கழற்றி, போன் பேசுவது போல, அப்பாஸ் கொண்டாடினார். இதன் பிறகு தான், ஒரு அல்டிமேட் சம்பவம் போட்டியில் அரங்கேறியது. அப்போது களத்தில் இருந்த கிறிஸ் வில்லியம்ஸ் என்ற பேட்ஸ்மேன், அடுத்து சிக்ஸர் ஒன்றை பறக்க விட்டார்.
ஆரவாரம் செய்த அணியினர்
உடனடியாக, அவரும் அப்பாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது பேட்டினைக் கொண்டு, தொலைபேசியில் அழைப்பது போல செய்து காட்டினார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், அடுத்து ஒரு சிக்ஸர் அடித்த வில்லியம்ஸ், மீண்டும் பேட் மூலம் மொபைல் போனில் பேசுவது போல, கேலி செய்தார். இதனால் எதிரணியினர் எரிச்சல் அடையவே, பேட்டிங் அணியிலுள்ள வீரர்கள், வில்லியம்ஸின் செயலை ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
ஒரு விக்கெட் எடுத்ததன் பெயரில், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பந்து வீச்சாளருக்கு, தன்னுடைய ஸ்டைலில் பதிலடி கொடுத்த பேட்ஸ்மேனின் வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.
கோலி உங்களுக்கு என்னதான் ஆச்சு..? மறுபடியும் இப்படி ஏமாத்திட்டீங்களே.. கடுப்பான ரசிகர்கள்..!
IN A FANCODE LEAGUE MATCH 😂😂 pic.twitter.com/AUOrwcITNB
— Srihari. 001 (@srihari_009) February 11, 2022

மற்ற செய்திகள்
