Valimai BNS

பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ரஷ்யா திடீர் அழைப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 25, 2022 06:29 PM

உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஒரு நிபந்தனையுடன் ரஷ்யா அறிவித்துள்ளது.

Russia ready to talk if Ukraine military surrendered

என்ஜினியரிங் படிக்கும்போதே அந்த பழக்கம் இருந்திருக்கு.. சிவகங்கை அருகே நடந்த கொடூரம்..!

உக்ரைன்-ரஷ்யா

சோவித் யூனியன் அமைப்பில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்து, ரஷ்யா-உக்ரைன் இடையே மோதல் இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே எல்லைப் பிரச்னையும் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் அடங்கிய ‘நேட்டோ’ அமைப்பில் இணைய உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது.

ரஷ்ய அதிபர்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக எல்லையில் 1 லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் நேற்று யாரும் எதிர்பாராதவிதமாக, உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே கிழக்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் தாக்குதலை தொடங்கின. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Russia ready to talk if Ukraine military surrendered

தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 137-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் வைத்துள்ளன.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில், உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. உக்ரைனை அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்புகிறோம். எங்கள் நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள்  விதித்துள்ள பொருளாதர தடைகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும்’ எனவும்  ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இந்த ட்விஸ்ட்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே.. சிஎஸ்கே தனி.. மும்பை தனி.. வெளியானது ஐபிஎல் அட்டவணை..!

Tags : #RUSSIA #UKRAINE MILITARY #RUSSIAN FOREIGN MINISTER SERGEI LAVROV #உக்ரைன்-ரஷ்யா #ரஷ்ய அதிபர் #பேச்சுவார்த்தை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Russia ready to talk if Ukraine military surrendered | World News.