"உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?.." ட்விட்டரில் வந்த 'கமெண்ட்'... 'ரசிகரை' விளாசிய இர்பான் பதான்... பரபரப்பு 'சம்பவம்'!!.. நடந்தது என்ன??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் 67 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கத் தவறினர். 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது. இந்தியாவில் வைத்தே நடைபெற்ற டி 20 போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்ததால், பல முன்னாள் வீரர்கள் இந்த தோல்வி குறித்து பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான், தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய அணியின் டி 20 தோல்விக்கு என்ன காரணம்?. அநேகமாக, பிட்ச்சில் பந்தின் வேகம் மாறுபட்டு இருக்கலாம்' என பதிவிட்டிருந்தார்.
What was the reason India lost the first t20 vs England ? I think PACE was the difference
— Irfan Pathan (@IrfanPathan) March 13, 2021
இந்த பதிவில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், 'பாஸ், நீங்கள் வேகமாகவே பந்து வீசியதில்லை' என கிண்டலுடன் கமெண்ட் செய்திருந்தார்.
Boss, you never had PACE.
— extremist (@extremist) March 13, 2021
இதனையடுத்து, ரசிகரின் கமெண்ட்டிற்கு ரிப்ளை செய்த இர்பான் பதான், 'நீங்கள் இதுவரை இந்திய அணிக்காக ஆடியதேயில்லை. இருந்தும், நீங்கள் ஸ்விங் பந்து வீசும் ஒருவரிடம் இது பற்றி பேசுகிறீர்கள்' என ரசிகருக்கு பதிலடி கருத்தை தெரிவித்துள்ளார். இர்பான் பதானின் இந்த ரிப்ளை, நெட்டிசன்களிடையே கடும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
You never played for India yet you talking to a guy who had swing:)
— Irfan Pathan (@IrfanPathan) March 13, 2021
ஒரு பக்கம், தேவையில்லாமல் கமெண்ட் செய்யும் ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டார் என்று பதானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தாலும், இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் ஆடினால் மட்டும் தான், கிரிக்கெட் பற்றி பேச வேண்டுமா என்பது போன்ற எதிர் கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.