‘மனுசன் காட்டு அடி அடிப்பாரு.. அவரோட விக்கெட்டை எடுக்கணும்னா இவர் மாதிரி ஒருத்தர்தான் சரியான ஆள்!’.. 'பிரபல வீரரின் பெயரை முன்மொழிந்த' கவுதம் கம்பிர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்களுக்கு பந்து வீசுவது விஷப்பரீட்சை தான். அதில் ஒருவரான ஆண்ட்ரூ ரசல் கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 510 ரன்கள் விளாசினார்.

7-வது ஆர்டரில் களமிறங்கினாலும், 2018 ஆம் ஆண்டு 318 ரன்கள் அடித்திருந்தார். இதன் ஸ்டிரைக் ரேட் மட்டும் 185. இப்படி அடித்து துவம்சம் செய்த இவரது ஆட்டம் கடந்த நான்கு வருடங்களாக இவரது ஆட்டம் உச்சத்திற்கு போய்விட்டது. இந்த நிலையில்தான், இந்நிலையில் இந்த வீரரை 5 வருடங்களாக வழிநடத்திய கவுதம் காம்பீர், இவரது விக்கெட்டை வீழ்த்த யாரால் முடியும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில் “தற்போது உள்ள சூழலில், ஐபிஎல் தொடரில் ஆண்ட்ரூ ரசலுக்கு பந்து வீச ஒன்று அல்லது இரண்டு பந்துவீச்சாளர்களால்தான் முடியும். குறிப்பிட்டு சொன்னால். ஜாஸ்பிரிட் பும்ராவை போன்ற பந்துவீச்சாளர்கள்தான் ஆண்ட்ரூ ரசல்லின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான சரியான வீரர். அவர்களால்தான் ஆண்ட்ரூ விக்கெட்டை எடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
