”இதெல்லாம் பத்தாது.. சும்மா கிழிக்கணும்.. இன்னும் ஆக்ரோஷமா.. ரிஸ்க் எடுங்க”.. முன்னாள் வீரரின் ‘செம்ம’ அட்வைஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Feb 14, 2020 07:09 AM

விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு இன்னும் ஆக்ரோஷமாக பந்துவீச்சில் ஈடுபட வேண்டும் என்று இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அறிவுரை கூறியுள்ளார்.

Bumrah needs to be extra aggressive, Ex-Cricketer zaheer khan

இதுபற்றி பேசிய ஜாகீர்கான், ‘ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் 10 ஓவர்களை எதிர்கொண்டு எதிரணி வீரர்கள் 35 ரன்கள் எடுத்தால் கூட பரவாயில்லை, ஆனால் அவரது பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்துவிடக் கூடாது. ரன் எல்லாம் மற்ற வீரர்களின் பந்துவீச்சின்போது எடுத்துக் கொள்ளலாம் என்பதே எதிரணிகளின் வியூகமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசியவர், இந்திய அணியின் திறமிக்க பந்துவீச்சாளர் பும்ரா, எதிரணிகளின் இந்த வியூகத்தை புரிந்துகொண்டு விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான தனது பந்துவீச்சினை இன்னும் ஆக்ரோஷமாக வீச வேண்டும். அதற்காக வழக்கமானதை விடவும் சற்று கூடுதல் ரிஸ்க் எடுக்கவும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Tags : #JASPRIT BUMRAH #ZAHEER KHAN