"அன்னைக்கு... அந்த மேட்ச்ல.. அவர் இல்லனா கோலியின் நிலை இதுவா இருந்திருக்கும்!" .. மனம் திறந்த முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு கவுதம் கம்பீரும் ஒரு முக்கியமான காரணம்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கம்பீர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல கருத்துக்களை கூறி வருகிறார். பெரும்பாலும் தோனியை விமர்சித்து பேசும் கம்பீர், தற்போது தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரானது கோலிக்கு மோசமான சுற்றுப் பயணமாக இருந்ததாகவும், அந்த அணியில் தானும் இருந்ததாகவும் குறிப்பிட்ட கம்பீர், அதில், ஒரு போட்டியில் மட்டும் விளையாடியதாகவும், “அந்த சுற்றுப்பயணத்தின் வீரர்கள் அனைவரும் தோனி என்ற ஆளுமையின் கீழ் பாதுகாப்பில் இல்லாமல் இருந்திருந்தால் பல வீரர்களின் வாழ்க்கை முடிந்திருக்கும். குறிப்பாக கோலிக்கு தோனி உறுதுணையாக இருந்தார்” என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்தமுறை கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பிரிம்மிங்காம் மைதானத்தில் அடித்த சதம் தற்போது வரை என்னால் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் தான் கோலி சூப்பர் ஸ்டார் போல் மாறினார். 2014-ஆம் ஆண்டு 10 ஆட்டத்தில் சேர்த்து 134 ரன்களை மட்டுமே எடுத்த கோலி, 2017 ஆம் ஆண்டு 8 ஆட்டத்தில் 697 ரன்களை குவித்தது உட்பட, இதற்கெல்லாம் காரணம் தோனி மட்டும் தான், அன்று அவர் கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால் தற்போதைய சூப்பர் ஸ்டாராக கோலி இருந்திருக்க மாட்டார்” என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.