“நல்ல ஃபினிஷரும் இல்ல, பெரிய ஹிட்டரும் இல்ல.. எதுக்குமே உதவாதவர போயி”.. ட்விட்டரில் மோதிக்கொண்ட ஆகாஷ் சோப்ராவும்.. ஆல்ரவுண்டரும்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணி எதற்காக, எதற்குமே உதவாத நீஷமை ஆட வைக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் பொங்கி எழுந்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் சீசன் 13ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவருடைய பேட்டிங் மற்றும் பௌலிங் எந்த வகையிலும் தனது பங்களிப்பை அளிக்கவில்லை என்று ரசிகர்கள் கருதுவதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ட்விட்டரில், “ஜிம்மி நீஷமை கடுமையாக சாடியுள்ளார். அதன்படி எதற்காக பஞ்சாப் அணி தொடர்ந்து நீஷமை ஆடவைக்கிறது? வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் என்ற போதிலும் அவர் பவர்ப்ளே, டெத் ஓவர் என எதிலும் பந்து வீசுவதில்லை. நான்காம் அல்லது ஐந்தாம் வரிசையில் பேட்டிங்கில் இறங்குவதில்லை. அவர் நல்ல ஃபினிஷரும் கிடையாது, பெரிய ஹிட்டரும் கிடையாது. பிறகு ஏன் எதற்குமே பயன்படாத வீரரை பஞ்சாப் அணி தொடர்ந்து ஆட வைக்கிறது?” என்று பேசியுள்ளார்.
Averaging 18.5 striking at 90 doesn’t win many matches either 😂😂😂😂 https://t.co/qNmotRL0WT
— Jimmy Neesham (@JimmyNeesh) October 3, 2020
ஆகாஷ் சோப்ராவின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த, ஜிம்மி நீஷம், “18.5 என்கிற சராசரி புள்ளிகளுடன் 90 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டிங்கில் ஆடக்கூடிய வீரரும் மேட்ச் வின்னர் அல்ல!” என்று ஆகாஷ் சோப்ராவின் பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளார் நீஷம்.
Correct my friend. That’s why nobody picks me anymore. I get paid for doing something else 😇🤗 I’m glad that you don’t have an issue with my observations but with my cricket stats. Go well for the rest of the #IPL. https://t.co/FFuYAyFtMZ
— Aakash Chopra (@cricketaakash) October 3, 2020
இதற்கு மீண்டும் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா, “சரிதான் நண்பரே. அதனால்தான் என்னை எந்த அணியும் எடுத்துக்கொள்ளவில்லை. நான் வேறுவிதமாக பணிகளை செய்து சம்பாதித்து கொண்டிருக்கிறேன். உங்கள் பிரச்சனை எனது பேட்டிங் புள்ளிவிவரமாகத்தான் இருக்கிறதே தவிர, எனது கருத்துடன் முரண்படவில்லை நீங்கள். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆட வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்