வாஷிங்டன் சுந்தரின் சூப்பர் ஆட்டம்... பின்னணி 'இது' தான்!.. வேற லெவலில் சிறப்பு கவனிப்பு!.. ஐபிஎல் மட்டுமில்ல... அதையும் தாண்டிய ஸ்கெட்ச் 'இது'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபியின் பௌலர் வாஷிங்டன் சுந்தர் கடந்த தொடர்களிலும் தற்போது ஐபிஎல் சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் அறிமுக போட்டியில் காப்பாவில் விளையாடிய சுந்தர் தற்போது ஐபிஎல்லில் தனது சிறப்பான ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் 2021 தொடரின் ஆர்சிபி பௌலிங் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து அந்த அணிக்காக மட்டுமின்றி முன்னதாக ஆஸ்திரேலியா மற்றம் இங்கிலாந்து தொடர்களிலும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது ஐபிஎல் 2021 தொடரின் ஆர்சிபியின் வெற்றித் தருணங்களில் உடன் கைகொடுத்து வருகிறார்.
பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே வாஷிங்டன் சுந்தர் அசத்தி வருகிறார். இந்நிலையில் பல்வேறு தருணங்களில் கேப்டன் விராட் கோலி தனக்கும், தனது வளர்ச்சிக்கும் சிறப்பாக உதவி வருவதாக சுந்தர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 4 -5 ஆண்டுகளாக அவர் மைதானத்தில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் தனது வளர்ச்சியில் சிறப்பான பங்கு வகித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விராட்டிடம் இருந்த இந்த காலகட்டத்தில் கற்று கொண்டவையே, தான் சிறப்பான கிரிக்கெட் வீரராக மாற காரணமாக அமைந்துள்ளதாகவும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 4 மாதங்கள் தனது கிரிக்கெட் கரியரில் சிறப்பானவற்றை கொண்டு வந்துள்ளதாகவும், ஐபிஎல் 2021 சீசனும் சிறப்பாக அமையும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல் 6 ஓவர்களை ஸ்பின்னர் ஒருவரிடம் கொடுப்பது மிகவும் சிறப்பானது என்றும், அதற்காக விராட் கோலிக்கு தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் சிறப்பாக விளையாடுவது தன்னை நல்ல ஸ்பின்னராக உணர வைப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இது தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதன்மூலம், விராட் கோலி தன்னை சிறப்பான டி20 பௌலராக மாற உதவியுள்ளதாகவும் முதல் 6 ஓவாகளில் பந்துவீசுவதை தான் சவாலாக விரும்பி செய்தாகவும் அவர் மேலும் கூறினார். இதேபோல அணிக்கு தேவையான பேட்ஸ்மேனாக தான் விளையாடுவது குறித்தும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த சீசனில் ஆர்சிபி நம்பிக்கையுடன் அதிக போட்டிகளில் வெல்லும் என்றும் கூறியுள்ளார்.