VIDEO: ‘என்னங்க இப்டி போட்டாரு’!.. அம்பயரே ‘கன்ஃபியூஸ்’ ஆயிட்டாரு பாவம்.. போட்டி நடுவே நடந்த சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது விஜய் சங்கர் வீசிய நோ பால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் 20-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. இதில் ஆரம்பத்திலேயே கேப்டன் டேவிட் வார்னர் (6 ரன்கள்) ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ-கேன் வில்லியம்சன் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் 38 ரன்கள் எடுத்திருந்தபோது ஜானி பேட்ஸ்டோ அவுட்டாகினார்.
இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, கடைசியாக களமிறங்கிய சுஜித் (6 பந்துகளில் 14 ரன்கள்) அதிரடியாக விளையாடி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 66 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 7 ரன்கள் எடுக்க, அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் 2 இடத்துக்கு முன்னேறியது.
— Simran (@CowCorner9) April 25, 2021
இந்த நிலையில் இப்போட்டியின் 13-வது ஓவரை ஹைதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை ரிஷப் பந்தின் தலைக்கு மேலே நோ பாலாக விஜய் சங்கர் வீசினார். இதனால் குழம்பிப்போன அம்பயர் களத்தில் நின்ற மற்றொரு அம்பயரிடம் ஆலோசனை நடத்திய பின் நோ பால் என அறிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
