'சிஎஸ்கே'வின் இளம் வீரர் போட்ட 'ட்வீட்'.. வரிந்துக் கட்டிக்கொண்டு 'சப்போர்ட்'க்கு வந்த 'ரசிகர்கள்'... "வேற டீம் போயிருந்தா இது எல்லாம் நடந்துருக்காதுல்ல..!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று வெளியேறியிருந்தது.
இதன் காரணமாக, தோனியின் கேப்டன்சி மற்றும் சீனியர் வீரர்களின் ஆட்டம் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதனையடுத்து, இந்த சீசனில், இதுவரை 5 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, அதில் நான்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் பட்டையை கிளப்பும் சிஎஸ்கே, இந்த முறை கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக, அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனால், என்ன தான் சிறப்பாக ஆடினாலும், சென்னை அணி மீது, தொடர்ந்து ஒரு விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. அணியிலுள்ள இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்புகளை வழங்காமல், அதிக அனுபவமுள்ள சீனியர் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவது தான் விமர்சனத்திற்கு காரணம். கடந்த சீசனின் போதும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காதது, அதிகம் விமர்சனத்தை சந்தித்திருந்தது.
கடந்த முறை, இளம் வீரர் கெய்க்வாட்டிற்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தது. இவர் கடைசி மூன்று போட்டிகளில், தொடர்ச்சியாக அரை சதமடித்து அசத்தியிருந்தார். இதனால் இந்த சீசனிலும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால், மேலும் திறமையுள்ள இளம் வீரர்கள் பலர், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமலே சென்னை அணியில் இருந்து வருகின்றனர். தமிழக வீரர் ஜெகதீசன், 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் களமிறங்கினார்.
ஆனால், அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே போல, மற்றொரு தமிழக வீரர் சாய் கிஷோர் (Sai Kishore), ராஞ்சி தொடர் உள்ளிட்ட பல முதல் தர போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக வலம் வந்த போதும், ஒரு போட்டியில் கூட சிஎஸ்கே அவரை பயன்படுத்தவில்லை. இந்த சீசனிற்கு முன்பாக நடைபெற்றிருந்த ஏலத்தில், மற்றொரு இளம் வீரர் ஹரிஷங்கர் ரெட்டியையும் சென்னை அணி எடுத்திருந்தது.
வேகப்பந்து வீச்சில் அதிக வேரியேஷன்களை காட்டும் ஹரிஷங்கர் ரெட்டிக்கு, இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சீசனின் ஆரம்பத்தில், சென்னை அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் சொதப்பிய போது ஹரிஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதினர். ஆனாலும், அவர் இதுவரை களமிறங்கவில்லை.
அணியிலுள்ள அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியாது என்றாலும், மற்ற ஐபிஎல் அணிகள் அனைத்தும் சிறந்த இளம் வீரர்களைக் கண்டெடுத்து, அவர்களை மேம்படுத்தி வருகிறது. ஆனால், சிஎஸ்கே இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் வழங்குவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், சென்னை அணியைச் சேர்ந்த இளம் வீரர் சாய் கிஷோர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என ட்வீட் செய்துள்ளார்.
நமக்கான வாய்ப்புகள் கிடைக்காத போதும், தொடர்ந்து நாம் கடின உழைப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் என்பதை குறிப்பிட்டு, சாய் கிஷோர் போட்ட ட்வீட்டின் கீழ், ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Kadamaiyai sei, Palanai edhir paarkadhe!
— Sai Kishore (@saik_99) April 27, 2021
நீங்கள் வேறு அணியில் இருந்திருந்தால், நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும், நிச்சயம் ஒரு நாள் வாய்ப்பு கிடைத்து அசத்துவீர்கள் என்பது போன்ற கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Neenga Lam Punjap Rajasthan Poi Iruntha Inneram Unga Thiram Therinthu Irukkum .
pavam Jagathesan Matham Team Poi Iruntha Definetea Play panni irupar😏Feel Sad for you Guys
— wear Mask 💛 (@Arun69295411) April 27, 2021
Dont worry bro , upcoming season la kandipa u are the future. Get all the knowledge u need now. Next season namma dan ✨
— Jaddu (@nithishjaddu) April 27, 2021
Don't Worry Bro : ) One Day #SaiKishore 🔥
— ❤️Sathya Priya❤️ (@SathyaPriya_Off) April 27, 2021
Don't worry Kishore.
I hope next year does not take you in their team so that you moved to some other team where you can showcase your skills.
— Mr.DDD (@3D_Magician) April 27, 2021
antha ratham ❤️apuditha .....erukum❤️namakku ana train varum...
Athula sambavam seiyom nna💛💛
— murali😉 (@murali56557289) April 27, 2021