'கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு'... 'அறிவிப்பு வெளியிட்ட டி20 உலகக் கோப்பை வின்னர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான சாமுவேல்ஸ் 2018ஆம் ஆண்டில் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 71 டெஸ்ட் போட்டிகள், 207 ஒருநாள் போட்டிகள், 67 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சாமுவேல்ஸ் டெஸ்டில் 7 சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 10 சதங்களும் விளாசியுள்ளார். மொத்தமாக டெஸ்ட்டில் 3917 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 5606 ரன்களும், டி20 போட்டிகளில் ரன்களும் எடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற இரண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் இறுதிப் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றவர் சாமுவேல்ஸ். 1979க்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பையை வென்ற 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் சாமுவேல்ஸ் இலங்கைக்கு எதிராக 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்துள்ளார்.
அதன்பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியிலும் இங்கிலாந்துக்கு எதிராக சாமுவேல்ஸ் 66 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை வெல்ல உதவினார். சர்வதேச கிரிக்கெட்டில் 152 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள சாமுவேல்ஸின் பெயர் இந்தியாவில் எழுந்த மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளில் அடிபட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
