'நாட்டுக்காக விளையாடறத விட'... 'அவருக்கு ஐபிஎல் முக்கியமாகிடுச்சா???'... 'இப்போவாவது நடவடிக்கை எடுப்பீங்களா, இல்ல?!!... 'முன்னாள் வீரர் விளாசல்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக ஓய்விலிருந்த ரோஹித் சர்மா நேற்றைய ஐபிஎல் போட்டியில் விளையாடியது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை எனக் கூறப்பட்ட ரோஹித் சர்மா, நேற்றைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் திலிப் வெங்சர்க்கார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த 4 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இதனால் அவருடைய காயத்தை காரணம் காட்டி அவர் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்படவில்லை. ஆனால் அன்றே அவர் வலைப்பயிற்சி செய்யும் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட, அது பல சர்ச்சைகளைக் கிளப்பியது.
இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மாவை பரிசோதித்து அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிட்டாக இல்லை என இந்திய அணியின் பிசியோ நிதின் படேல் சான்றிதழ் கொடுத்தது பற்றி முன்னாள் இந்திய வீரர் திலிப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர், "இந்திய அணிக்காக விளையாடுவதை காட்டிலும் ஐபிஎல்லில் விளையாடுவது ரோஹித்திற்கு முக்கியமானதா? தேசத்திற்காக விளையாடுவது முக்கியமா அல்லது ஒரு அணிக்காக விளையாடுவது முக்கியமா? இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா? அல்லது அல்லது ரோஹித்தின் காயம் பற்றி சரியாக அறிவதில் பிசிசிஐ பிசியோ தான் தவறிவிட்டாரா?" எனக் கேள்விகளை அடுக்கியுள்ளார்.