
"'ஐபிஎல்' மட்டும் முடியட்டும்.. அடுத்து என்ன பண்ண போறேன்னு பாருங்க".. ட்விட்டரில் 'ரெய்னா' போட்ட 'கமெண்ட்'.. "ஓஹோ, அப்போ 'கன்ஃபார்மே' பண்ணிட்டீங்க போல!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இதே நாளில், தோனியும் தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்து அதிர்ச்சியளித்திருந்த நிலையில், உடனடியாக ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்து, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இருந்து, தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய சுரேஷ் ரெய்னா (Suresh Raina), இந்தாண்டு தொடரில் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணிக்காக அரை சதமடித்து அசத்தலாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில், ஸ்மார்ட் ஹோம் சிஸ்டம் தொடர்பான விளம்பரம் ஒன்றில் ரெய்னா நடித்திருந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்திலும் ரெய்னா பகிர்ந்திருந்தார். இதனிடையே, ரெய்னாவின் இந்த விளம்பர வீடியோவை பகிர்ந்த ரசிகர் ஒருவர், ரெய்னாவின் முகபாவனைகள் மற்றும் நடிப்புத் திறனை பாராட்டிய நிலையில், உங்களின் அடுத்த இலக்கு பாலிவுட் தான் என குறிப்பிட்டிருந்தார்.
After ipl for sure bro !
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 20, 2021
ரசிகரின் இந்த பாராட்டைக் கவனித்த ரெய்னா, ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு நிச்சயம் தான் அப்படி செய்வேன் என பதில் தெரிவித்துள்ளார். அதிக திரைப்படங்கள் மற்றும் பாடல்களை கேட்கும் பழக்கம் கொண்ட சுரேஷ் ரெய்னா, தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக அறிவித்துள்ள கமெண்ட், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
