3 பேர் தான்... பர்ஸ் காலி... அவருக்கு ''இவ்ளோ' தொகையா?... வாரும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 19, 2019 07:46 PM

'டாடி ஆர்மி' என்று செல்லமாக அழைக்கப்படும் சென்னை அணி ஏலத்திற்கு முன் சுமார் 5 வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது. இதனால் சென்னை அணி யாரை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

IPL Auction : CSK Bought Sam Curran, Piyush Chawla for a Huge Amount

இந்தநிலையில் இன்றைய ஏலத்தில் சென்னை அணி இதுவரை 3 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கும், சாம் கரணை 5.5 கோடிக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹாசில்வுட்டை 2 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. மொத்தமுள்ள 14.60 கோடியில் இருந்து 14.25 கோடியை சென்னை அணி இதுவரை செலவழித்து விட்டது.

தற்போது அந்த அணியிடம் 35 லட்சங்கள் மட்டுமே மீதமுள்ளது. இதனால் இன்னும் 2 வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்குமா? இல்லை இத்தோடு ஏலத்தை நிறுத்திக் கொள்ளுமா? என்பது தெரியவில்லை. இதற்கிடையில் சாவ்லாவுக்கு 6.75 கோடிகள் ரொம்ப அதிகம் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.