‘நேத்தே எங்க பாய்ஸ் அதை சொன்னாங்க’!.. டாஸ் போடுறதுக்கு முன்னாடியே மாஸ்டர் ‘ப்ளான்’ போட்ட ‘தல’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
இந்தியாவில் 14-வது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேபோல் தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 1-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டி டெல்லியில் இன்று (28.04.2021) நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனைப் பொறுத்தவரை அபிஷேக் ஷர்மா மற்றும் விராட் சிங் ஆகிய இருவருக்கு பதிலாக சந்தீப் ஷர்மா மற்றும் மனிஷ் பாண்டே இடம் பிடித்துள்ளனர்.
Both teams have made changes to their XI.@ChennaiIPL: Lungi Ngidi, Moeen Ali back. Dwayne Bravo, Imran Tahir miss out.@SunRisers: Manish Pandey, Sandeep Sharma back. Abhishek Sharma , Virat Singh miss outhttps://t.co/dvbR7X1Kzc #VIVOIPL #CSKvSRH pic.twitter.com/kqKjtygLoi
— IndianPremierLeague (@IPL) April 28, 2021
சென்னை அணியைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர் பிராவோ மற்றும் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்குப் பதிலாக மொயின் அலி மற்றும் லுங்கி நிகிடி இடம் பெற்றுள்ளனர்.
Toss Update: @SunRisers have won the toss and they have opted to bat first against @ChennaiIPL https://t.co/dvbR7X1Kzc #VIVOIPL #CSKvSRH pic.twitter.com/8wmi572lJo
— IndianPremierLeague (@IPL) April 28, 2021
இந்த நிலையில் டாஸ் போட்டு முடித்த பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ‘நாங்கள் முதலில் பவுலிங்கை தேர்வு செய்ய நினைத்தோம். ஏனென்றால் நேற்று பயிற்சியில் ஈடுப்பட்ட எங்க பாய்ஸ் (வீரர்கள்), மைதானத்தில் பனி இருப்பதாக கூறினார்கள். அதனால் இங்கு நாம் சேஸ்தான் செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். பனி இருப்பதால் பந்து வீச சற்று கடினமாகவே இருக்கும்’ என அவர் கூறினார். இப்போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்திருப்பதால், தோனி முடிவு செய்ததுபோல் பவுலிங்கே சென்னை அணிக்கு கிடைத்துள்ளது.