'கண்ணுக்குள்ள வச்சு வீரர்களை பாதுகாத்த பிசிசிஐ!.. அப்படி இருந்தும் வேலையைக் காட்டிய கொரோனா'!.. பயோ பபுள் உடைந்தது எப்படி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் அணிகளின் பாதுகாப்பான பயோ பபுள்களை பல்வேறு சமயங்களில் உடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

வீரர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரி, ஹோட்டல் அறைகள், விமான பயணங்கள் மூலம் மிகவும் பாதுகாப்பாக போடப்பட்டிருந்த பயோபபுளை மீறி கொரோனா வைரஸ் உள் நுழைந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட விதிமுறை இல்லாமல் அணிகள் தங்களது போக்கில் மைனாத்திற்கு மிகவும் தொலைவில் ஹோட்டல் அறைகளை புக் செய்தது பயோ பபுள் உடைய காரணமாக அமைந்திருக்கும். உதாரணத்திற்கு ஒரு அணி, ஷாப்பிங் மாலின் உள்ளே உள்ள ஹோட்டலை புக் செய்து தங்கியிருந்துள்ளனர். அதே போல, ஒரு அணி ஹோட்டலை காலி செய்துவிட்டு பிறகு 12 நாட்கள் கழித்து அதே ஹோட்டலில் ரூம் எடுத்துள்ளனர். இந்த இடைபட்ட 12 நாட்களில், அந்த அறைகள் வேறு நபர்களின் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதல் தற்போது வரை விமான போக்குவரத்தால் தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரு நகரம் விட்டு மற்றொரு நகரத்திற்கு செல்லும் போது வீரர்கள் எளிதாக கொரோனாவால் தாக்கப்படுகிறார்கள். குறிப்பாக, 2 வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் விமான பயணத்தின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
பார்வையாளருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும், போட்டிகள் 6 மைதானங்களில் திட்டமிடப்பட்டிருந்தன. பல்வேறு முதலீட்டாளர்கள், முழு தொடரையும் ஒரே நகரத்தில் நடத்த வேண்டும், அல்லது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால், பிசிசிஐ ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது என்றும், பல்வேறு மைதானங்களில் போட்டி நடைபெறும் என்றும் அறிவித்தது. இதுவும் பயோபபுள் உடைந்ததற்கான காரணமாக இருக்கலாம்.
அனைத்து அணிகளும் மைதான ஊழியர்களை பயிற்சிகளுக்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்காக எந்த பயோபபுளும் ஏற்படுத்தவில்லை. சென்னை மற்றும் டெல்லியில் பணியாற்றிய மைதான ஊழியர்கள் பலருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது அணிகள் செய்த மிகப்பெரும் தவறாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
