'நெலம கைய மீறி போயிடுச்சு... வேற வழியே இல்ல'!.. கடைசி ஆயுதத்தை கையிலெடுத்த பிசிசிஐ!.. ஐபிஎல் அணிகள் 'இந்த' முடிவை ஏற்குமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2021 தொடர் 29 போட்டிகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அணிகளுக்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிசிசிஐ முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், ஐபிஎல் அணிகளுக்குள் சிறப்பான பயோ பபுளை மேற்கொண்டு கொரோனா பாதிக்காத வண்ணம் பிசிசிஐ முறையாக திட்டமிட்டு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று கேகேஆர் அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து கடுமையான பயோ பபுளில் கொரோனா நுழைந்தது எப்படி என்று பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பாதிப்பை அடுத்து நேற்றைய ஆர்சிபி மற்றும் கேகேஆர் இடையிலான போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிஎஸ்கேவிலும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் நாளைய சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியும் தள்ளி வைக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கொரோனா பாதிப்பு இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க அடுத்த கட்ட போட்டிகளை மும்பையில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பயணங்களை தவிர்க்க முடியும். இதற்கென மகாராஷ்டிர அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்ட போட்டிகள் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த சூழலில் அங்கு கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு மும்பையில் ஒரே கட்டமாக போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்தில் மும்பையில் அதிகமான கொரோனா பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2021 ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ சற்றுமுன் தெரிவித்துள்ளது.