'போனது போகட்டும்!.. 2021 ஐபிஎல் மொத்தமா கேன்சல் ஆச்சுனா... யார் சாம்பியன்?.. எப்படி முடிவு பண்ணுவாங்க'?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021 ஐபிஎல் தொடர் ஒருவேளை கைவிடப்பட்டால் இந்த தொடரின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2021 ஐபிஎல் தொடர் எதிர்பார்க்கப்பட்ட படியே நிறுத்தப்பட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படாமல் தற்காலிகமாக தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இனி போட்டிகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. போட்டிகள் நடக்குமா? இல்லை கைவிடப்படுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியாவில் இனி கொரோனா குறைந்து, இப்போது சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்லும் வீரர்கள் மீண்டும் இந்தியா வந்து, தனிமைப்படுத்தி, ஐபிஎல் ஆடுவது எல்லாம் இயலாத காரியம். அதோடு இந்த காலண்டர் இயரில் வேறு சில தொடர்கள் இருப்பதால் ஐபிஎல் நடப்பதே சந்தேகம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ள 2021 ஐபிஎல் தொடர் ஒருவேளை கைவிடப்பட்டால் இந்த தொடரின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் வின்னர் தேர்வு செய்யப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
தற்போது உள்ள புள்ளி விவரங்களின் அடிப்படியில் டெல்லி அணி 8ல் 6 போட்டிகளில் வென்று டேபிள் டாப்பராக உள்ளது. சிஎஸ்கே அணி 7ல் 5 போட்டியில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. +1.263 ரன் ரேட் கொண்டு டெல்லியை விட சென்னைதான் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
டெல்லி அணியின் ரன் ரேட் +0.547 மட்டுமே. இதனால் தற்போது இந்த புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி அணி தேர்வு செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், ஐபிஎல் 2021 ஒருவேளை கைவிடப்பட்டால் வின்னர் அறிவிக்கப்பட மாட்டார்கள்.
யாரும் சாம்பியன்ஸ் என்று அறிவிக்கப்பட மாட்டார்கள். மொத்தமாக தொடர் கைவிடப்படும். யாருக்கும் பரிசுகள் கிடைக்காது. 2021 ஐபிஎல் தொடரில் வெற்றியாளர் என்று எந்த அணியும் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வருட சீசன் கண்டிப்பாக நடக்க வாய்ப்பு குறைவுதான் என்று கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
