‘சிஎஸ்கே அணியை துரத்தும் கொரோனா’!.. மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதி.. வெளியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலஜியை தொடர்ந்து மற்றொரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி மும்பையில் ஒரே ஹோட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினரும் தங்கி இருந்தனர். இதில் கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல்.பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைத்து வீரர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு (Michael Hussey) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து PTI வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘மைக் ஹசிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்குத் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் சோதனைக்கு அனுப்பியதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்ததை அடுத்து, நடப்பு ஐபிஎல் 2021 தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
