'அவங்க' ஒண்ணும் 'முட்டாள்கள்' இல்ல சரியா...! 'ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க...' - பிசிசிஐ-ஐ விளாசி தள்ளிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரை பிசிசிஐ பாதியில் நிறுத்தியது.
2021ஆம் ஆண்டுகனா 14வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்னும் 31 லீக் போட்டிகள் தடைபட்டுள்ளன. இவை டி20 உலகக்கோப்பைக்கு பிறகு நவம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆனால் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எண்ணிக்கையாலும், கிரிக்கெட் வீரர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்ட காரணங்களால் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், பிசிசிஐ மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, 'கடந்த வருடமும் இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இருந்தது. ஆனால் சென்ற ஆண்டிலோ கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது. அதன் காரணமாக வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அவ்வளவாக இல்லை.
ஆனால் இந்த முறையோ இந்தியாவில் நடத்தி தவறு செய்து விட்டது பிசிசிஐ. சில அணிகளின் கிரிக்கெட் வீரர்களும் இந்த முறை பயோ பபுள் விதிமுறைகள் மீறினர்.
இந்த முறை பரவி வரும் கொரோனா வைரஸும் இந்த அளவு தாக்கத்தையும், அழிவையையும் ஏற்படுத்தவில்லை. இந்திய மக்கள் மருத்துவமனை படுக்கைகளுக்காகவும், ஆக்சிஜனுக்காகவும் திண்டாடுவதை தொலைக்காட்சிகளில் வீரர்கள் பார்த்து வருகின்றனர்.
மைதானத்திற்கு வெளியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக இருப்பதை பார்த்திருப்பார்கள். எனவே தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டுமா என சிந்தித்திருப்பார்கள், சிரமப்பட்டிருப்பார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
இந்த சூழலில் தான் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. இதற்காக நான் வீரர்களை குறைக்கூறவில்லை. போட்டி முன்கூட்டியே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.