பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் 'ஹரி நாடார்' கேரளாவில் கைது...! - என்ன காரணம்...?
முகப்பு > செய்திகள் > இந்தியாபனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார், கேரளாவில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் 37,727 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் வந்து பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.
ஆலங்குளம் தொகுதியைப் பொறுத்த வரையில் மனோஜ் பாண்டியன், 74,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பூங்கோதை ஆலடி ஆருணா, 70,614 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தை ஹரி நாடார் பிடித்தார்.
இந்த நிலையில், பெங்களூரில் ஹரி நாடார் 360 கோடி தருவதாக கூறி 7.20 கோடி பண மோசடி செய்துள்ளதாகவும், அந்த குற்றத்திற்காக கேரளாவில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு சில நாட்களில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை உருவாக்கியுள்ளது.