'அஸ்வினுக்கு' எல்லாத்துலயும் வாய்ப்பு குடுங்க.. கேட்டது 'யாருன்னு' தெரியுமா?.. திகைப்பில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 20, 2019 10:06 PM

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்பு அளிக்குமாறு ஹர்பஜன்  சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

Bring Ashwin back in limited overs cricket: Harbhajan Singh

டி20, ஒருநாள் போட்டி,  டெஸ்ட் போட்டிகள் என அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடிவந்த அஸ்வின் ஒருகட்டத்துக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற ஆரம்பித்தார். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களுக்கு நடுவே காயம் காரணமாக பாதி தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அஸ்வினுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த சமயத்தில் பேட்டியளித்த ஹர்பஜன் சிங் அணியின் முதன்மை பந்து வீச்சாளர் குல்தீப் தான், அஸ்வின் இல்லை என பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் காட்சிகள் மாறின. பார்ம் அவுட் காரணமாக குல்தீப் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற முடியாமல் தற்போது தவித்து வருகிறார். அதே நேரம் தென் ஆப்பிரிக்கா தொடரில்  அஸ்வின் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது வங்கதேச தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஹர்பஜன், ''அஸ்வினுக்கு ஏன் குறைந்த ஓவர் (ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளில் வாய்ப்பு அளிக்கக் கூடாது?,''' என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் டி20 போட்டிகளால் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒரு ஸ்பின்னரை ரன் விகிதத்தினை குறைக்க வைத்திருக்கும் போது, விக்கெட் வீழ்த்தும் அஸ்வினை ஏன் அணியில் எடுக்கக்கூடாது? அவர் சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடிவருகிறார்,'' என தெரிவித்து இருக்கிறார்.