எல்லா கேப்டனையும் 'வளைச்சு' போட்டாச்சு.. மூணு பேருல.. டீமோட 'கேப்டன்' யாரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Nov 19, 2019 09:54 PM
டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் பாதியில் விலகியதால், அந்த அணியை இளம் வயது கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியா ரஹானே ஆகிய இருவரையும் அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு டெல்லி அணியை வழிநடத்தப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும், ரஹானே 2018-ம் ஆண்டு அணியை பிளே ஆப் சுற்றுக்குள் கொண்டு சென்றார். மேலும் எல்லா அணியிலும் பேட்டிங் செய்யும் வீரரே கேப்டனாக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் 2020-ம் ஆண்டு டெல்லி அணியை வழிநடத்த போவது ஷ்ரேயாஸ் இல்லை வேறு யாராவதா? என்ற சந்தேகத்துக்கு டெல்லி அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. என்னதான் மற்ற அணிகளின் கேப்டனை எடுத்தாலும் கூட டெல்லி அணியை ஷ்ரேயாஸ் தான் வழிநடத்துவார் என தெரிவித்து இருக்கிறது.
மிச்சம் மீதி இருக்கற கேப்டனையும் வளைச்சு போடுங்கப்பா..
