நெற்றியில் விபூதி..மார்பில் 'அம்மா' டாட்டூ..WWE -ஐ மிரட்டும் இந்திய வீரர்... யார் இந்த பாகுபலி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபுகழ்பெற்ற WWE போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீர் மஹான் என்பவர் கலந்துகொண்டு வருகிறார்.
Also Read | உலகின் மிக உயரமான பெண்மணிக்கு மேலும் 3 கின்னஸ் விருது.. இவங்க இப்படி வளர்றதுக்கு இதுதான் காரணமா?
WWE
உலகம் முழுவதும் பிரபலமான WWE போட்டிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் வலம்வரும் வீரர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கேன், அண்டர்டேக்கர், ரோமன் ரெய்ன்ஸ் என மக்களின் மனம் கவர்ந்த வீரர்களின் பட்டியல் அதிகம். அதில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் இந்தியாவை சேர்ந்த வீர் மஹான். தற்போது WWE RAW போட்டிகளில் மஹான் காலந்துகொண்டு வருகிறார்.
நெற்றியில் விபூதி, மார்பில் "அம்மா" என்ற டாட்டூ என வித்தியாசமாக வலம்வரும் வீர் மஹானுக்கு இந்தியாவை தவிர்த்து உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.
ரிங்கு சிங் ராஜ்புத்
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் 1982 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 ஆம் தேதி பிறந்தவர் ரிங்கு சிங். இவரது தந்தை டிரக் ஓட்டுநர் ஆவார். இவருக்கு மொத்தம் 9 குழந்தைகள். இவர்களில் ஒருவரான ரிங்கு சிங், சிறுவயது முதலே ஈட்டி எறிதலில் சிறந்து விளக்கியிருக்கிறார். இதனால் தேசிய அளவிலான ஜுனியர் பிரிவிலும் ரிங்கு சிங் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் பெற்றிருக்கிறார்.
விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக லக்னோவில் உள்ள குரு கோவிந்த் விளையாட்டு கல்லூரியில் சேர்ந்தார் ரிங்கு சிங். தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டுவந்த ரிங்கு சிங், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மில்லியன் டாலர் ஆர்ம்ஸ் என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார்.
பரிசு
இந்த ரியாலிட்டி ஷோவில் பேஸ்பாலை அதிவேகத்தில் எறியும் டாஸ்க்கில் கலந்துகொண்ட இவர் மணிக்கு 87 மைல் வேகத்தில் பேஸ்பாலை எறிந்து அனைவரையும் திகைக்கவைத்தார். இதற்காக அவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பிறகு, பேஸ்பாலையே தனது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்துக்கொண்டார் ரிங்கு சிங்.
இதனை அடுத்து பேஸ்பால் விளையாட அமெரிக்காவிற்கு பயணித்திருக்கிறார் ரிங்கு சிங். அங்கே தனது வேகத்தினை அதிகரித்து திறமையுடன் செயல்பட்ட காரணத்தினால் இவருக்கு தொழில்முறை பேஸ்பால் வீரராகும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவை சேர்ந்த பைரட்ஸ் எனும் தொழில்முறை பேஸ்பால் குழுமத்தில் இணைந்தார் ரிங்கு சிங். இதன்மூலம் தொழில்முறை பேஸ்பால் விளையாட்டில் பங்குபெற்ற முதல் இந்தியர் என்னும் பெருமையையும் பெற்றார் இவர்.
மல்யுத்தம்
பேஸ்பாலில் ஆர்வம் செலுத்திவந்த ரிங்கு சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு WWE போட்டிகளில் கால்பதித்தார். ஆரம்பத்தில் சவுரவ் குர்ஜார் என்னும் வீரருடன் இணைத்து போட்டிகளில் கலந்துகொண்ட இவர் அதன் பின்னர் தனியாக களம்கண்டார். அப்போது தனது பெயரையும் வீர் மஹான் என மாற்றியிருக்கிறார். 6.4 அடி உயரம், 125 கிலோ எடை என மல்யுத்த வீரர்களுக்கே உரிய உடல்வாகை கொண்டுள்ள இந்த வீர் மஹானுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8