‘நா வந்துட்டன்னு சொல்லு’.. ‘எப்டி போனேனோ அப்டியே திரும்பி வந்துட்டன்னு சொல்லு!’.. ஜான் ஸினாவின் அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 03, 2020 06:23 PM

உலகம் முழுவதும் WWE எனப்படும் குத்துச்சண்டைகளைக் காண அதிக ரசிகர்கள் ஈடுபாட்டுடன் உள்ளனர்.

திரும்பி வந்த ஜான் ஸினா john cena to participate in wrestlemania

இதில் இதில் ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர் , ஏ.ஜெ லீ, ராக், அண்டர்டேக்கர், ட்ரிபிள் ஹச், ஜான் ஸினா,கிரேட் காளி,பிக் ஷோ உள்ளிட்ட நட்சத்திர குத்துச் சண்டை வீரர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் இவர்களை கொண்டாடுவதிலும், இவர்களின் போட்டிகளை தொடர்ந்து காண்பதிலும் அலாதியான விருப்பம் கொண்டவர்கள்.

இவ்வரிசையில் முக்கியமான வீரரான ஜான் ஸினா சுமார்  17 வருடங்களுக்கு முன்பு (2002- ஆம் ஆண்டு) WWE-வில் பங்குபெறத் தொடங்கினார். 16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், அமெரிக்க டைட்டில்களையும், டேக் டீம் சாம்பியன்ஷிப் டைட்டிலும் வென்றுள்ள இவர் கடந்த 2019 -ம் ஆண்டு ஜூன் மாதம் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களை அதிர வைத்தது.

பின்னர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார். இந்த நிலையில் இவர் தற்போது மீண்டும் ரஸ்ஸில்மேனியா 36-ல் களம் காண்கிறார். இதுகுறித்து தனது

ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

 

Tags : #WWE #JOHNCENA