'என் உயிரை பத்தி கவலை படாதீங்க...' 'என் மகனை எப்படியாவது காப்பாத்துங்க...' ராட்சஸ அலையில் சிக்கிய அப்பா, மகன்... WWE ரெஸ்லிங் வீரரின் கடைசி நிமிடங்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | May 21, 2020 03:34 PM

அமெரிக்காவில் பிரபல WWE குத்துச்சண்டை வீரர் தனது அன்பு மகனைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை கொடுத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

WWE Wrestler has given his life to save his lovable son

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, அமெரிக்காவின் இருக்கும் ஒட்டுமொத்த கடற்கரைகளும் மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சில கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதில் ஒரு கடற்கரை தான். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் வெனிஸ் கடற்கரை. இந்த கடற்கரைக்கு, பிரபல WWE வீரர் ஷாட் காஸ்பார்ட் தன்னுடைய பத்து வயது மகனுடன் நீச்சலடிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக கடல் அலைகள் ஆக்ரோஷமாக ஆறு அடிக்கும் மேலாக எழுந்தன. இந்த ராட்சஸ அலையில் சிக்கிய ஷாட் காஸ்பார்ட் மற்றும் அவரது மகன் கடலுக்கு உள்ளே இழுத்துச் செல்லபட்டனர். இதனை கண்ட அங்கிருந்த கடற்கரை பாதுகாவலர்கள், அவர்களை காப்பாற்றுவதற்கு போராடினர்.

இருவரையும் கரைக்கு இழுத்துச் செல்லும் முயற்சியில் கடற்கரை பாதுகாவலர்கள் இறங்கினர். ஷாட் காஸ்பார்ட்   ஆறு அடி ஏழு அங்குல உயரம் மற்றும் அதிக எடை கொண்ட உடலைக் கொண்டவராக இருந்ததால், அவரை மீட்பதற்கு சிரமமாக இருந்தது.

இந்நிலையில், ஷாட் காஸ்பார்ட் தன் உயிரை பற்றி கவலை பட வேண்டாம், முதலில் தன்னுடைய மகனை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் ஷாட் காஸ்பார்டை விட்டுவிட்டு, அவருடைய மகனைக் காப்பாற்றிவிட்டு, அதன் பின் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.ஆனால் அவரை அலைகள் அடித்து சென்றுவிட்டதால், அவர்களால் அவர் எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 16.5 மணி நேரம் அவரை மீட்க தேடுதல் பணி நடைபெற்றது. எனினும், அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேடுதல் நடவடிக்கையை நிறுத்தினர். இதையடுத்து நேற்று, காலையில் அவரது உயிரற்ற உடல் கரை ஒதுங்கியது.தன் மகனைக் காப்பாற்ற தன் உயிரை பொருட்படுத்தாத  ஷாட் காஸ்பார்ட் பற்றிய செய்தி அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஷாட் காஸ்பார்ட் 2008 முதல் 2010 வரை தொடர்ந்து ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்று வந்தார். அதை விட்டு விலகிய பின் சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பின் கிராபிக் நாவல் எழுதி ஒரு எழுத்தாளராகவும் மாறியுள்ளார். அவருக்கு ரெஸ்லிங் உலகம் இரங்கலை தெரிவித்து வருகிறது.

Tags : #WWE