‘3 கேப்டன்கள் ரெடி’.. பரபரப்பான ஐபிஎல் போட்டிக்கு ‘நடுவே’ மற்றொரு டி20 மேட்ச்.. பிசிசிஐ ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுபாயில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பிசிசிஐ புதிய அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இதனை அடுத்து மகளிர் டி20 சேலஞ்ச் என்ற தொடரை பிசிசிஐ ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து திட்டங்களும் மாறின. இதனால் ஐபிஎல் தொடரை முதலில் நடத்த பிசிசிஐ களமிறங்கியது. இந்த வருட ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிந்துவிட்டன.
இந்தநிலையில் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மோதிய மூன்று அணிகளும் இந்த ஆண்டு மோதுகின்றன. இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், ஸ்மிர்தி மந்தானா தலைமையிலான ட்ரெயில்பிளைசர்ஸ் மற்றும் மித்தாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி ஆகிய மூன்று அணிகள் மோதுகின்றன.
லீக் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற முதல் இரண்டு அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன. ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுகள் நடைபெறும்போது, இடைவெளியில் உள்ள நாட்களில் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டிகள் நடைபெற உள்ளன. நவம்பர் 4,5,7 தேதிகளில் முதல் மூன்று லீக் போட்டிகளும், நவம்பர் 9ம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய மகளிர் வீராங்கனைகளை மட்டுமின்றி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளும், தாய்லாந்து நாட்டை சேர்ந்த நட்ஹக்கன் சாந்தம் என்ற ஒரு வீராங்கனையும் பங்கேற்க உள்ளார்.