'பிளே' ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் 'அணி'கள் எவை??... என்னோட 'சாய்ஸ்' இது தான்,,.. கணித்துக் கூறும் முன்னாள் 'பவுலர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலீக் தொடரில் பாதி ஆட்டங்களில் அனைத்து அணிகளும் விளையாடியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், நான்காவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் உள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர், எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளார்.
புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை, டெல்லி மற்றும் நான்காவது இடத்திலுள்ள கொல்கத்தா ஆகிய மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என தெரிவித்த அகர்கர், நான்காவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அல்லது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி பெறும் என அகர்கர் குறிப்பிட்டுள்ளார்.
'சென்னை அணி தான் தகுதி பெறும் என சீஸனின் ஆரம்பத்தில் நான் நினைத்திருந்தேன். ஆனால், சென்னை அணியை விட ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் சிறப்பாக ஆடி வருவதால் அவற்றில் ஒரு அணி தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என நான் நினைக்கிறேன்' என அகர்கர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
