ஒரு காலில் பேட்டிங்.. வேற லெவல் பயிற்சியில் வாஷிங்டன் சுந்தர்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Mar 07, 2023 12:50 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் பயிற்சி பெறும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Indian all rounder Washington Sundar on batting practice video

வாஷிங்டன் சுந்தர்

தமிழகத்தைச் சேர்ந்தவர் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சுந்தர் அறிமுகமானார். அதே ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் முதன் முதலாக களமிறங்கிய இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். இதுவரையில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் 16 ஒரு நாள் போட்டிகளிலும் 45 டி20 போட்டிகளிலும் வாஷிங் மெஷின் வாஷிங்டன் சுந்தர் விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 265 ரன்கள் எடுத்துள்ள இவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். டி20 போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் இவர்

வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில்

2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார். புனே அணிக்காக விளையாடிய இவர் பின்னர் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதுவரையில் 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சுந்தர் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

அண்மையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அந்த தொடருக்கான இந்திய அணியில் பங்குபெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் பவுலிங் மற்றும் பேட்டிங் என கலக்கினார். இந்த நிலையில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவாரா? என்ற கேள்வி இப்போதே ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

வீடியோ

இந்த சூழ்நிலையில் சுந்தர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அரைவட்ட பந்து போல இருக்கும் பொருள் மீது ஒரு  காலில் நின்று பேட்டிங் பயிற்சி பெறுகிறார் சுந்தர். இந்த வீடியோவை பகிர்ந்து 'Work life balance' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நெட்டிசன்கள் கவனமாக பயிற்சி பெறும்படி அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

 

Tags : #WASHINGTON SUNDAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian all rounder Washington Sundar on batting practice video | Sports News.