"அத மிஸ் பண்றியா டா??.." தமிழிலேயே நடராஜன் கேட்ட கேள்வி.. சிரித்துக் கொண்டே பதில் சொன்ன வாஷிங்டன் சுந்தர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டனர்.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது.
இதில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 14 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்தது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல் கோப்பையை ஒருமுறை வென்று, தொடர்ந்து பிளே ஆப் சுற்றுகளில் முன்னேறி வந்த ஹைதராபாத் அணி, கடந்த முறை படு மோசமாக ஆடி, கடும் விமர்சனத்தினை சந்தித்திருந்தது. இதனால், இந்த முறை நிச்சயம் தங்கள் மீதான விமர்சனத்தினை உடைத்து எறிந்து, பழைய பார்முக்கு வர வேண்டும் என்பதிலும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
தமிழக வீரர்கள்
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், நிக்கோலஸ் பூரன், மார்க்ரம், வாஷிங்டன் சுந்தர், நடராஜன் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. இதில், தமிழக வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இணைந்து, உரையாடலில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மீண்டு வந்த வாஷிங்டன் சுந்தர்
முன்னதாக, நடராஜன் ஏற்கனவே ஹைதராபாத் அணிக்காக ஆடி இருந்தார். தன்னுடைய யார்க்கர் பந்து வீச்சு மூலம் இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்த நடராஜனுக்கு, காயம் காரணமாக அணியில் வாய்ப்பினை தக்க வைக்க முடியாமல் போனது. மற்றொரு வீரரான வாஷிங்டன் சுந்தரும், சமீபத்தில் காயத்தில் இருந்து குணமடைந்து, மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் ஆட வேண்டி, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வருத்தமா இல்லையா?
வாஷிங்டன் சுந்தர் கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக ஆடியிருந்தார். இந்த முறை அவரை ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணி தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சுந்தரிடம், "ஃபர்ஸ்ட் டைம், சன் ரைசர்ஸ் அணிக்காக ஆட போறே. இதுவரை பெங்களூர் அணிக்காக ஆடி இருந்தே. இந்த தடவ பெங்களூர் அணிக்காக ஆடாமல் போனது வருத்தமாக இருக்கா?. இல்லை ஹைதராபாத் அணியே நல்லா இருக்கா?" என கேட்டார்.
பயிற்சியில் ஈடுபடும் வீடியோ
இதற்கு பதிலளித்த சுந்தர், "இதுவே ரொம்ப நல்லா இருக்கு. இது எனக்கு புடிச்சிருக்கு!" என பதில் அளித்தார். இதனைக் கேட்டு, நடராஜனும் சிரித்துக் கொண்டே இருக்கிறார். தொடர்ந்து, வாஷிங்டன் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளது.
Oh Washington. Veedu mana Greeku Veerudu. #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/n0zXm3u6AC
— SunRisers Hyderabad (@SunRisers) March 18, 2022
ஹைர்பாத் அணியில் தமிழக வீரர்கள் உரையாடும் வீடியோக்கள், தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.