அதிரடி காட்டிய 'ஆஸ்திரேலியா' ... 'சுக்கு' நூறான எதிர்பார்ப்பு ... இளம் அணிக்கு இறுதி போட்டியில் நிகழ்ந்த ஏமாற்றம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 08, 2020 04:31 PM

மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் முதன் முறையாக நுழைந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 99 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி கோப்பையை இழந்துள்ளது.

India Women\'s Team loses against Australia in World Cup

மகளிர் டி 20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளான அலிசா ஹேலி மற்றும் பெத் மூனே ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இருபது ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அலிசா ஹேலி 75 ரன்களும், பெத் மூனே 78 ரன்களும் எடுத்தனர்.

185 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதினாறு வயதான ஷபாலி வர்மா முதல் ஓவர்களில் இரண்டு ரன்களுடன் நடையைக் கட்டி அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, ஆஸ்திரேலியா அணியின் வெற்றி உறுதியானது. 99 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக டி 20 மகளிர் உலக கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணி தோற்ற போதிலும் இந்த உலக கோப்பையின் இளம் அணியான இந்திய அணி இறுதி போட்டி வரை தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : #INDIA VS AUSTRALIA #WORLD CUP #ALYSSA HEALY