‘அவங்களோட விளையாடுறதுனா கொஞ்சம் கஷ்டம்தான்’... ஆனாலும், மனம் திறந்த ‘பிரபல’ வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 30, 2019 06:15 PM

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா உடனான முதல் தொடர், தென்னாப்ரிக்க அணிக்கு நிச்சயம் எளிதாக இருக்காது என அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

SA face \'toughest start\' to World Test Championships

கிரிக்கெட் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டி மீதான ஆர்வத்தை மீண்டும் கொண்டுவருவதற்காக, டெஸ்ட் போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பை எனும் புதிய தொடர் முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக, இந்திய அணி ஆடும் 2 டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் கோப்பை தொடரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பிறகு, தென்னாப்ரிக்க அணியுடன், இந்திய அணி டெஸ்ட் தொடரை மேற்கொள்ள இருக்கிறது. தென்னாப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் அக்டோபர் 2-ம் தேதியில் இருந்து இந்திய மண்ணில் துவங்குகிறது.

இந்நிலையில் இதுகுறித்து டூ பிளசிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக எங்களின் ஈடுபாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. எங்களை மேலும் ஊக்கப்படுத்த சாம்பியன்ஷிப் தொடரை நன்கு பயன்படுத்துவோம். தென்னாப்பிரிக்கா வீரர்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார்.

முதல் தொடரே இந்திய அணியுடன் என்பது குறித்து பேசிய அவர், ‘எந்தவொரு அணியும் இந்தியா சென்று விளையாடுவது கடினம் என நினைப்பர். அந்த வகையில் எங்களுக்கு சாம்பியன்ஷிப் தொடர் மிகவும் கடினமாக தொடங்கப்போகிறது. இறுதியாக ஒவ்வொரு அணிகளும் இந்தியா சென்று விளையாட வேண்டும். நாங்கள் சிறப்பாக தொடங்குவோம் என்று நினைக்கிறேன்’ என்றார்.

Tags : #CRICKET #TESTCHAMPIONSHIP #DUPLESSIS