இதென்ன கிரிக்கெட் டெஸ்ட்-ஆ?... இல்ல... பொறுமைய சோதிக்கிற டெஸ்ட்-ஆ?... செம்ம கடுப்பில் கோலி!.. சொதப்பியது 'இந்த' இடத்தில் தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆமை வேகத்தில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் துவக்கத்திலும், நாளின் கடைசி 10 ஓவர்களிலும் விக்கெட் வேட்டை ஆடி, இந்திய அணியை சிக்க வைத்தனர்.
இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 233 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே வேகப் பந்துவீச்சை வைத்து இந்திய அணியை முடக்க முயற்சி செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஸ்விங் பந்துவீசுக்கு தங்கள் விக்கெட்டை பறி கொடுத்தார்கள்.
ப்ரித்வி ஷா டக் அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து புஜாரா - விராட் கோலி நிதான ஆட்டம் ஆடினர்.
புஜாரா ஆமை வேகத்தில் ஆடி 160 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். விராட் கோலி சிறப்பாக ஆடி 180 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். அவர் விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்த நிலையில், ரஹானே தவறாக ரன் ஓட அழைத்ததால் அவர் ரன் அவுட் ஆனார்.
கடைசி 10 ஓவர்களில் ரஹானே 42, ஹனுமா விஹாரி 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். சாஹா 9, அஸ்வின் 15 ரன்களுடன் நாளின் முடிவில் களத்தில் இருந்தனர். இந்திய அணி 89 ஓவர்களில் 233 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இந்திய அணியின் ரன் ரேட் 2.61 மட்டுமே. மிகவும் நிதானமாக ஆடிய இந்திய அணி விக்கெட் வீழ்ச்சியால் மோசமான நிலையில் உள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 250 ரன்களை கடப்பதே கடினம் என கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி 21 மெய்டன் ஓவர்கள் வீசி மிரட்டியது. ஸ்டார்க் 2, ஹேசல்வுட் 1, கம்மின்ஸ் 1, நாதன் லியோன் 1 விக்கெட் வீழ்த்தினர். 89 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 67 ஓவர்களை வேகப் பந்துவீச்சாளர்களை வீசச் செய்தது. இதுவே இந்திய அணி தடுமாற முக்கிய காரணமாகவும் அமைந்தது.

மற்ற செய்திகள்
