‘இது கொஞ்சம் கூட நல்லா இல்ல’... ‘அந்த 2 பேரும் ரன்களே எடுக்க மாட்டாங்க’... 'வெளுத்து வாங்கும் ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடன் பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. மேலும் முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காத டெஸ்ட் அணி வீரர்கள் பட்டியலையும் சேர்த்தே வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இதையடுத்து சில வீரர்களை தேர்வு செய்யாதது குறித்து கடும் விமர்சனத்தை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.
இளம் வீரர் ஷுப்மன் கில் ஐபிஎல் தொடர் மற்றும் டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு தான் அணியில் துவக்க வீரராக இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல, தன் ஃபார்மை நிரூபிக்க முடியாமல் தவித்த ரிஷப் பந்த், பயிற்சிப் போட்டியில் அதிரடியாக சதம் அடித்து மிரட்டி இருந்தார்.
கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் சதம் அடித்து இருந்தார். அவருக்கும் அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கே.எல்.ராகுலுக்கும் இடம் மறுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதில் அணியில் ப்ரித்வி ஷா, சாஹா இடம் பெற்றுள்ளனர். கில், பந்த் உடன் ஒப்பிடும் போது அவர்கள் இருவரும் அதிக ரன்கள் குவிப்பார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சில ரசிகர்கள் சாஹா, ப்ரித்வி ஷா 20 ரன் கூட எடுக்க மாட்டார்கள்.
ஆனால், சமீபத்தில் ரன் குவித்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் கில், ரிஷப் பந்த் சதம் அடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கும் போது எதற்காக சாஹா, ப்ரித்வி ஷாவை அணியில் தேர்வு செய்தீர்கள் என கேள்வி எழுப்பி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
I am finding it difficult to understand why KL Rahul and Shubman Gill are sitting outside. Prithvi Shaw was a failure in both practice games.
This is ridiculous. #AUSvsIND pic.twitter.com/BnervyIosM
— Aayush Sharma | آیوش شرما 🏳️🌈 (@JournalistWFH) December 16, 2020
Tough luck Shubman Gill and KL Rahul! Team Management has gone with a big gamble here with Shaw and Saha!#AUSvsIND
— Daanveer ↗️ (@daanveers) December 16, 2020
Prithvi Shaw and Wriddhiman Saha over Rishabh Pant and Shubman Gill!
Shocked n surprised at the selection. Last tour in Australia, Rishabh was second highest Indian scorer. Both Gill n him played well in practise match as well! #AUSvIND @BCCI @RaviShastriOfc @SGanguly99
— Shivam 🇮🇳 |🎸| (@itsShivam18) December 16, 2020