'உன்ன நம்பி 'டீம்'ல எடுத்ததுக்கு... உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட!'.. உச்சகட்ட கோபத்தில் கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் நவ்தீப் சைனி மீது கேப்டன் கோலி அதிருப்தியில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்த வாரம் தொடங்க உள்ளது. இரண்டு அணிகளும் இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதற்காக இரண்டு பயிற்சி ஆட்டங்களும் நடத்தப்பட்டது. இரண்டு பயிற்சி ஆட்டங்களும் கடைசியில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் நவ்தீப் சைனி மீது கேப்டன் கோலி அதிருப்தியில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இவருக்கும் முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு போட்டியிலும் இவர் மிகவும் மோசமாக ஆடி அதிர்ச்சி அளித்தார்.
இவர் விளையாடிய இரண்டு போட்டியிலும் ஓவருக்கு 9 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் கொடுத்தார். இரண்டு போட்டியிலும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். சைனி பெரிய அளவில் நன்றாக பவுலிங் செய்வது இல்லை. சைனி போடும் பவுலிங்கை ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக துவம்சம் செய்கிறார்கள்.
இவர் சரியான லென்த் மற்றும் லைனில் பந்து வீசுவது இல்லை. பயிற்சி ஆட்டத்திலும் இவர் இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் எடுத்தாலும், அதில் 2 பேர் பவுலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலி இவரை டெஸ்ட் அணியில் எடுக்க மாட்டார் என்கிறார்கள்.
இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா, ஷமி ஆகியோர் உறுதியாக ஆடுவார்கள். இவர்கள் இல்லாமல் உமேஷ் யாதவ் இன்னொரு பவுலராக இருப்பார். இதில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் சிராஜ் அணிக்குள் வருவார். இதனால் சைனிக்கு இந்திய அணியில் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள்.
சைனி மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்து கோலி அவரை அழைத்து சென்றார். பெங்களூர் அணியில் விளையாடும் வீரர் என்பதால் சைனிக்கு கோலி முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், கோலி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் சைனி அவரை ஏமாற்றி இருக்கிறார். இதனால் இந்திய அணியில் வரும் தொடர்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

மற்ற செய்திகள்
