'காயம் காரணமாக’... ‘பாதி போட்டியில் வெளியேறிய இந்திய ஆல்ரவுண்டர்’.... ‘தீவிர பயிற்சியால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் காயம் காரணமாக டி20 போட்டிகளில் இருந்து வெளியேறிய ரவீந்திர ஜடேஜா தற்போது காயத்தில் இருந்து விடுபட்டு உடற்பயிற்சி மேகொண்டு வரும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்து பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக ஆடி பெரும் பங்கு வகித்தார். ஆனால், முதல் டி20 போட்டியில் இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் கன்கசன் முறையில் இவர் வெளியேற இவருக்கு பதில் சாஹல் சேர்க்கப்பட்டார்.
அதோடு ஜடேஜாவுக்கு தொடையிலும் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அடுத்த வந்த டி20 போட்டிகளில் இருந்து மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில் இவர் ஓய்வு எடுப்பதற்காக வெளியேறினார். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் ஆட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ரவீந்திரா ஜடேஜா தற்போது காயத்தில் இருந்து விடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக ஜடேஜா பயிற்சி எடுத்து வருவதுடன், இன்று காலை மைதானத்திலும் பயிற்சியில் ஈடுபட்டார். சில மணிநேரங்கள் நெட் பயிற்சியிலும் ஜடேஜா ஈடுபட்டார். நினைத்ததை விட வேகமாக இவர் காயம் ஆறிவிட்டது என்று கூறப்படுகிறது. இதனால், வரும் 17-ம் தேதி அடிலெய்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் குல்தீப் யாதவ், பயிற்சியாளர் அருண் ஆகியோருடன் பிறந்தநாள் கேக் வெட்டி ஜடேஜா கொண்டாடினார்.
Recovery going well 🔋✌️#trainingmode pic.twitter.com/DcVkpr0kHY
— Ravindrasinh jadeja (@imjadeja) December 14, 2020

மற்ற செய்திகள்
