‘கேட்ச் பிடிக்கும்போது நடந்த மோதல்’... ‘டென்ஷனான விக்கெட் கீப்பர்’... ‘டீம் மேட்டை அடிக்கப் பாய்ந்ததால் சலசலப்பு’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபங்களாதேஷில் பங்கபந்து (Bangabandhu) டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம், சக வீரர் ஒருவரை அடிக்க கையை ஓங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்கபந்து டி20 தொடரில் தற்போது 20 போட்டிகள் முடிவடைந்துள்ளன. எலிமினேட்டர் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் தாக்கா (Beximco Dhaka) - பரிஷல் (Fortune Barishal) அணிகள் மோதின. தாக்கா அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருப்பவர் முஷ்பிகுர் ரஹீம். இவர் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தபோது 17-வது ஓவரில் பரிஷல் அணி, 19 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. பரிஷல் அணியின் அபீஃப் ஹோசைன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.
இதனால் கேப்டனான முஷ்பிகுர் ரஹீம் டென்ஷனாக இருந்தார். அப்போது 17-வது ஓவரின் கடைசிப் பந்தை அபீஃப் ஹோசைன் தூக்கி அடிக்க, அந்த பந்து எழுந்து மேலே சென்றது. அது தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே ரஹீம் ஓடி வர, அந்த பந்தை பிடிக்க பீல்டரான நசுமும் ஓடி வர இருவரும் மோதிக் கொள்வது போல சென்றனர். ஆனால் இறுதியாக அந்த கேட்சை ரஹீம் பிடித்தார்.
பந்தை பிடித்தவுடன் நசூமை அடிக்க கையை ஓங்கியபடி பாய்ந்தார். பின்பு அவரை கண்டபடி வசை பாடினார். இதனைக் கவனித்த சக வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். அதன்பின்னரே பிரச்சனை கட்டுக்குள் வந்தது. இறுதியாக ரஹீமின் டாக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் பங்களாதேஷ் தேசிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் வீரரும், மூத்த வீரருமான ரஹீமின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Calm down, Rahim. Literally. What a chotu 🐯🔥
(📹 @imrickyb) pic.twitter.com/657O5eHzqn
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) December 14, 2020

மற்ற செய்திகள்
